மதில்:

புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.
-அருண்

புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.
-அருண்
Posted by Arun at 12:50 PM 0 comments

மதிய பேருந்தில்
புத்தகத்தின் கடைசி பக்கம்
அத்தனை வெறுமை.
-அருண்
Posted by Arun at 1:35 PM 0 comments

சதை எலும்பு தோல்
நீக்கிப் பார்த்ததில்
சன்னமாய் கசிந்தது
மானுடம்-அள்ளி
வெளியே போட்டேன் .
இரத்தக் கரத்துடன்.
-அருண்
Posted by Arun at 1:46 PM 0 comments

அபத்தங்களின் பிள்ளைகளை
கொல்ல நினைத்து
வரிசையாய் கிணற்றில் வீச
கடைசியாய் நின்றாள்
அபத்தங்களின் தாய் - இன்னும்
சில பிள்ளைகளுடன்.
அவளை கொல்லவா?
-அருண்
Posted by Arun at 1:42 PM 0 comments

விளக்கு வீட்டில்
ஜன்னலைத் திறக்க
பயமாய் இருக்கிறது-அது
இரவா? பகலா?
-அருண்.
Posted by Arun at 1:34 PM 0 comments

நான் ஓங்கி
சத்தம் போட்டும்
பிரபஞ்சம்
ஓசைபடமால் இருக்கிறது.
-அருண்
Posted by Arun at 10:23 AM 0 comments

மடக்கும் கட்டிலை
இருபுறம் தரை தொட
முழுதாய் மூடிய
போர்வையின் உள்ளிருட்டில்
காணமல்போன பூனைக்குட்டி
உள் இழுத்தது-
என் பால்யத்தில்
நானங்கு படுத்திருந்த நினைவுகளை.
நான் குழந்தையா?
-அருண்
Posted by Arun at 7:47 PM 0 comments

ஞானம் பற்றிய கவிதை அது
தொலைத்துவிட்டேன்- அந்த
வகுப்பில் எழுதிய வரிகளை
அது கிழிந்த கிழிசல்தான்,
வார்த்தைகளும் வரைமடலும்.
தேடினேன்..
இங்கு இருக்குமா?
இல்லை இருக்காது.
எங்கே?
அதில் இருக்குமா?
கேள்விக் குறிகளாய் மனம்.
கிடத்தது பதில்
துணிமனிகளுக்குள்.
ஒரு நோட்டுப்புத்தகத்தில்.
அவனவனுக்கு கிடைத்ததாம்
போதி மர நிழலில்..
எனக்கு
துணிமணிகளுக்குள்.
-அருண்
Posted by Arun at 3:45 PM 0 comments

நல் அதிகாலையில்..
கனவுகள் கதவு தட்டியது
அது மூர்க்க ஒலிக்க,
முடியவில்லை
திரும்பிப் படுத்தேன்.
கதவுகள் திறக்கப்பட..
காற்று கட்டிழந்து கத்தியது
மயானச் சாம்பல் மனிதர்கள்
இட்ட நெருப்பு- பலர்
சுட்ட நெருப்பு
உஷ்ணம்.
ஒரு ஓரமாய் ஒதுங்க,
சடை பிடித்து
மத்தியில் போட்டனர்,
சினிமா பொய் சொன்ன
கிங்கினவர்.
மனிதர் கூட்டம்
அம்மனமாய்
ஏனோ கூச்சமில்லை
யாருக்கும் கவலையில்லை
சிரிக்கவுமில்லை
சலனமுமில்லை.
பின்னங் கதவில்
பார்வைகள்.
கூட்ட மத்தியில்
என் குரலில் யாரோ சொன்னது..
"உயிர் வலிக்க உதைப்பார்களாம்"
கதவின் பின்புலத்தில்-ஓர்
முடியாத முனகல்.
விசாரித்ததில்..
இன்னும் உதைக்கிறார்களாம்
ஹிட்லரை.
தடுமாறி விழித்து
கதவடைத்தேன்.
-"நல்லது செய்யனும்"
நேற்றைய கனவிலும்
விழித்தெழுந்தேன்.
-அருண்
Posted by Arun at 2:39 PM 0 comments




Posted by Arun at 2:03 PM 0 comments
Posted by Arun at 1:28 PM 0 comments
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.
மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.
அன்பன்
-கமல்ஹாசன்
Posted by Arun at 6:41 AM 2 comments